கோவாவில் செல்பி எடுக்க தடை…கண்காணிப்பு தீவிரம்

பனாஜி:

ரெயில் நிலையங்களில் செல்பி எடுக்க ரெயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுவோருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவிலும் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவாவுக்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நீச்சல், ஆபத்தான நீர் சாகசங்களில் ஈடுபடும் போது செல்போன்களில் செல்பி எடுக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்புக்கள் அதிகளவில் நடக்கிறது.

இதை தடுககும் வகையில் தனியார் பாதுகாப்பு வீரர்களை மாநில அரசு நியமித்துள்ளது. இது குறித்து தனியார் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரவி சங்கர் கூறுகையில், ‘‘கோவாவில் 10 இடங்களும், தெற்கு கோவாவில் 14 இடங்களும் ஆபத்தானதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் வீரர்கள் செல்பி எடுப்பர்வகளை தடுத்து நிறுத்துவார்கள்.

செல்பி, நீச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சிவப்பு கொடி, படங்களுடன் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் நீச்சல், நீர் விளையாட்டுகளுக்கு விதிகள் கடுமையாக்கப்படும்’’ என்றார்.