செல்பி மோகம்: 2 மாணவர்கள் பலி

லக்னோ:

த்தரபிரதேசத்தில் செல்பி மோகத்தால் ஆற்றில் குளிக்கும்போது செல்பி எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள்  ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

தற்போதைய இளைஞர்கள், இளைஞிகள், மாணவர்கள் செல்பி எனப்படும் தன்னைத்தானே போட்டோ எடுக்கும் மோகத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதன் காரணமாக நிறைய பேர் விபத்துக்குள்ளாகி மரணத்தை தழுவி வருவது அதிகரித்து வருகிறது.

selfie

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடியின் ஓரமாக நின்று செல்பி எடுக்க முயன்ற ஒருவர் கீழே விழுந்தது உயிர் விட்டதும், மும்பை கடலில் குளித்தபோது செல்பி எடுத்த ஒரு பெண் அலையியல் சிக்கி உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.

சம்பவத்தன்று ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 14 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கோசி ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.  ஆற்றைக் கண்டதும் சிலர் அங்குள்ள தண்ணீரில் குளிக்க சென்றனர். குளிப்பதை செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதில் இருவர் மட்டும்  ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது நிலை தடுமாறி ஆற்றுக்குள் மூழ்கி இறந்தனர்.

இதுகுறித்து அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த 2 மாணவர்களின் உடலை மீட்டனர். மீதமுள்ள 12 மாணவர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.