ஓடும் ரயிலில் செல்பி: மூன்று மாணவர்கள் பலி!

ஓடும் ரயிலில் செல்பி எடுக்க முயன்ற மூன்று மாணவர்கள் மரணமடைந்த சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வாங்கத்தில் லோக் ரயிலில் நான்கு மாணவர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். பெலூர், லியூயா பகுதியை ரயில் கடந்துகொண்டிருந்த போது, மாணவர்கள் வாசல் கதவு அருகே நின்றுகொண்டு ரயில் பாதைக்கு வெளியே கையை நீட்டி, செல்பி எடுக்க முயற்சி செய்தனர். .

அப்போது  எதிர்புற தண்டவாளத்தில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்களின் கைகளில் மோதியது. நிலை தவறி தண்டவாளத்தில் விழுந்த மாணவர்களில் மூவர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். மற்றுமொரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You may have missed