பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்! எங்கே?

லக்னா,

பொது இடங்களில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என உ.பி. மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உ.பி.யில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பொது இடங்களில் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறி செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்பியின் மோகம் காரணமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து,  மாநிலத்தில் உள்ள  உயரமான கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், தண்டவாளங்கள், பேருந்து நிலையங்களின் நின்று செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது,  மொரதாபாத் நகரில் பொது இடங்களில் செல்ஃபி  எடுக்க காவல்துறை தடை விதித்துள்ளது. தடையை மீறி செல்ஃபி எடுத்தால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் மாநிலம் முழுவதும் இதை அமல்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஊட்டி போன்ற மலைபிரதேசங்களில் குறிப்பிட்ட இடங்களில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறி எடுப்பவர்களிடம் இருந்து பைன் வசூலிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சீசனில் ஊட்டியில் தடையை மீறி செல்பி எடுத்தவர்களிடம்  அபராதமாக ரூ.4,35,000 வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.