நான் புத்தன் அல்ல!: செல்ஃபி விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் விளக்கம்

டை ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொள்ல வந்த நடிகர் சிவக்குமாருடன் இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயல.. அவரது போனை சிவக்குமார் தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் குறித்தே பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவி்திருப்பதாவது:

“செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் லேக், ஊட்டி தொட்டபெட்டா போய் அதை கம்போஸ் செய்து எடுக்கும் விவகாரம். அது பர்சனல் சமாச்சாரம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் ஒரு 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவுக்குப் போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போவதற்குள்  பாதுகாப்புக்குச் செல்லும் ஆட்களைக்கூட ஒதுக்கித்தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் சார் என்று நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்?

உங்களைப் படம் எடுக்கிறேன் சார் என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டீர்களா? விஐபி என்பவன் நாம சொன்னபடி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம் பேருடன் ஏர்போர்ட்டிலும் திருமண விழாக்களிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா?.

நான் புத்தன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நானும் மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோதான். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.” இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

  அவர் பேசிய ஆடியோ கீழே:

 

Leave a Reply

Your email address will not be published.