பசுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டி:  தனி ஆப் வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்.

 

சுக்களுடன் செல்ஃபி எடுக்கும் போட்டியை அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்., இதற்காக தனி ஆப் ஒன்றையம் வெளியிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான, “பசுப்பாதுகாப்பு அமைப்பு”  இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அமைப்பிந் தலைவர் லலித் அகர்வால் இது குறித்து தெரிவித்ததாவது:

“பசுவின்  பெருமைகள், பயன்களை அனைவரும் அறியச் செய்யவே இந்த போட்டியை அறிவித்திருக்கிறோம். பசுக்களுடன் செல்பி எடுத்து அனுப்புவர்களில் இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்போம்.

2015 ஆம் ஆண்டு இதுபோன்ற போட்டி ஒன்றை அறிவித்தோம். அப்போது  போட்டியாளர்கள் பசுக்களுடன் எடுத்த செல்ஃபிக்களை அனுப்புவதில் சிரமம் இருந்தது.

ஆகவேதான் இப்போது புதிய செயலியை உருவாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி