மகாராஸ்த்ராவில் பருவமழை பெய்ய இன்னும் இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில், மகாராஸ்த்ர மாநிலத்தில் வெறும் 19 % தண்ணீரே மீதமுள்ளது. குறிப்பாக மராத்வாடா அணைகளில் 3 % தண்ணீரே மீதம் உள்ளது. இது வரலாறு காணாத குறைந்த அளவாகும்.maha drought featured
ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கு வழங்கப் பட்டுவந்த தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ளது.
குடிதண்ணீருக்கு முக்கிவத்துவம் தர நிர்வாகிகளுக்கு முதல்வர் ஃபட்னாவிஸ் அறிவுறுத்திஉள்ளார்.
நமது கட்டுரையில்  சுட்டிக்காட்டியப் படி, அரசு புதிய சர்க்கரை ஆலைகளுக்கு அணுமதிமறுக்க முடிவெடுக்கும் எனத் தெரிகின்றது.
அதிகப் படியான விவசாயிகள் தற்கொலை பதிவான அம்ராவதி அணைப் பகுதியில் நீர்மட்டம் 18% சதமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு இங்கு  தண்ணீர் அளவு 30 %  ஆக இருந்தது.
மராத்வாடா அணையில் சென்ற ஆண்டு அளவான 11% இருந்து குறைந்து 03 % ஆக குறைந்துள்ளது.
இரயில் மூலம் தண்ணீர் லத்தூர் பகுதிக்கு தண்ணீர்  அனுப்பப்பட்டுள்ளது.

eknath khadse
10,000 லிட்டர் தண்ணீர் செலவில் ஏற்படுத்தப் பட்ட எலிகாப்டர் இறங்குதளம் அமைத்து இறங்கிய அமைச்சர் “ஏக்நாத் கட்சே”

இந்நிலையில் இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் விமர்சனதிற்குள்ளாகி உள்ளனர். எலிகாப்டர் இறங்குதளம் அமைக்க தண்ணீர் வீணடித்ததற்காக அமைச்சர் ஏக்னாத் காட்சே, வறட்சி பாதிக்கப் பட்ட லத்தூர் பகுதியில் செல்ஃபி எடுத்ததற்காக அமைச்சர் பங்கஜ முண்டே  ஆகியோர் விமர்சிக்கப்பட்டுள்ளார்.  பங்கஜ் முண்டே இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுபான ஆலைகளூக்கு தண்ணீர் தருவதை நியாயப் படுத்தி இவர் பேட்டி அளித்து இருந்தார். அதற்கு சிவசேனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
pankajae mundae
பங்கஜ முண்டே மீது கடலைமிட்டாய் ஊழல் புகார் எழுந்தது நினைவிருக்கலாம்.