செல்ஃபி மோகம்: கோவா கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்த ரம்யா கிருஷ்ணா

பனாஜி:

திகரித்து வரும் செல்ஃபி மோகம் பலரது  உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையில், செல்ஃபி மோகத்துக்கு அடிமையான ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் ரம்யா கிருஷ்ணா என்பவரும், கோவா கடற்கரை அருகே நின்றுகொண்டு செல்ஃபி எடுத்தபோது அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ரம்யா கிருஷ்ணா.  இவர் கோவா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். நேற்று ஓய்வு நேரத்தின்போது, கோவாவில் கடற்கரைக்கு சென்று செல்ஃபிகளை எடுத்து குவித்தார். அப்போது, கடலை பின்புலமாகக் கொண்டு அவர் தமது செல்போனில் செல்பி எடுக்க முயன்றபோது,  திடீரென வந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதை கண்ட அருகில் உள்ளவர்களும், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும், அவரை காப்பாற்ற கடலுக்குள் இறங்கினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் உயிர் இழந்த நிலையிலேயே மீட்கப்பட்டார். செல்ஃபி மோகத்தால் பெண் மருத்துவர் உயிர் இழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dr Ramya Krishna, Goa's sea waves, Selfie Tempted
-=-