என் ஃபேவரிட் ஆக்டருடன் ஒரு செல்ஃபி : ஆமிர் கான்

--

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சைரா எனும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷூட்டிங்காக ஜப்பான் சென்றிருந்த சிரஞ்சீவியை அங்கு வந்திருந்த ஆமிர் கான் சந்தித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆமிர் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிரஞ்சீவியை கியோடா விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு இது இன்ப அதிர்ச்சி, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி கதையில் அவர் நடிப்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தேன். நீங்கள் என்றுமே எங்களுக்கு உத்வேகம் சார் என பதிவிட்டுள்ளார்.