சிறையில் இருக்கும் 67 வயதான சுப்ரதா ராயை இடைக்கால ஜாமீனில் விட ரூ .5,000 கோடி வைப்புநிதி மற்றும் சம அளவு வங்கி உத்தரவாதம் மற்றும் சஹாரா முதலீட்டாளர்களுக்கு தரவேண்டிய ரூ 36,000 கோடி கட்டணம் உட்பட கடுமையான நிபந்தனைகளை விதித்து இருந்தது  உச்சநீதிமன்றம்.
இந்தப் பணத்தை செலுத்தாமல், ஜாமினில் வெளிவர முடியாது. ஆனாலும், சஹாரா குழும்ம், மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகி வருகின்றது.
supreme court
 
உச்ச நீதிமன்றத்தில் வாதாடும்போது வழக்கின் உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் விவாதிக்குமாறு ஆலோசனையை கூறி,  சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயை ஜாமினில் விடுதலை செய்ய மீண்டும் மீண்டும் முறையிடுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையில் உச்சநீதிமன்றம், மார்ச் 4, 2014 லிருந்து சிறையில் இருந்து வரும் சுப்ரதா ராய் ஜாமீனில் வெளியிட ஏதுவாக, பிணையத்தொகையை தயார்செய்ய, சகாரா குழுமத்தின்  86 “வில்லங்கமில்லாத” சொத்துக்களை விற்க இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) க்கு உத்தரவிட்டுள்ளது.
SEBI 3
நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் சமர்ப்பித்த வலுவான வாதமான “ சட்டம் மற்றும் உண்மைகள் எங்கள் கட்சிகாரர்(ராய்) பக்கத்தில் இருக்கின்றது. இவ்வுலகில், எங்கேயும்,  எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் ஒரு நபர் இரண்டு ஆண்டுகள்  சிறையில் வைக்கப்பட வில்லை” என்பதை நீதிமன்றம் குறிப்பு எடுத்துக் கொண்டது.
subatra roy 1 subatra roy 2sahara 1 sahara 2 sahara 3
மற்றொரு வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரதா ராயின் விடுதலைக்காக அடிக்கடி வேண்டுகோளை விடுப்பதை பார்த்து,  நீதிபதி தாக்கூர் அவர்கள் “உண்மைகள் மற்றும் சட்டப்படி வாதிடுங்கள். ஒவ்வொரு முறையும் எங்களுக்கு சொற்பொழிவு வழங்காதீர்கள். ரூ 1.8 லட்சம் கோடிக்கு அதிபதியான ஒரு மனிதனால் சொற்ப ரூபாய் 10,000 கோடியை ஜாமீன் தொகையாக செலுத்தி விடுதலை ஆக முடியவில்லை என்பது உலகில் எங்குமே நடக்காத அபூர்வம்”  எனக் கூறினார்.
சஹாரா குழுவின் ஆலோசகர் கவுதம் அவஸ்தி, எங்கள் குழு ரூ .5,000 கோடி பணத்தினை கட்டிவிட்டதாகவும், வங்கி உத்திரவாதம் ரூ .5,000 கோடி மட்டுமே பாக்கி என்றும் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில், செபி அமைப்பு கூறுகையில், எங்களிடம் 40000 கோடி மதிப்புள்ள சஹாராவின்  சொத்துக்கள் இருந்தாலும், தற்போதைய சந்தை நிலவரத்தில்,  எங்களால் சந்தை மதிப்பிற்கு அந்தச் சொத்துக்களை விற்க முடியவில்லை எனக் கூறியது.
அதற்கு நீதிபதிகள் “சந்தை விலையில் 90%க்கு கீழ் விற்க வேண்டாம். செபியும் சஹாராவும் இணைந்து ஒரு நிபுணர்குழு அமைத்து, நீதிபதி அகர்வால் மேர்பார்வையில், சொத்துக்களை விற்க ஏற்பாடு செய்யவும்” என ஆலோசனைக் கூறினர்.