சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’..

சாமி விளக்குகளை விற்று சம்பள பாக்கி ‘செட்டில்’..

மனிதர்களுக்கு நம்பிக்கை கீற்றுகளை விதைக்கும் கோயில்களைக் கூட இருளடையச் செய்து விட்டது ,கொரோனா.

கேரளா மாநிலத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு சுமார் ஆயிரம் கோயில்களை நிர்வாகம் செய்து வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயில் உள்ளிட்ட 30 பெரிய கோயில்கள் இதில் அடக்கம்.

 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாகக் கோயில்கள் மூடிக்கிடக்கின்றன.

பக்தர்கள் இல்லை. காணிக்கைகள் கிடையாது.

இந்த கோயில்கள் மூலம் மாதம் 100 கோடி ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது.

இப்போது பைசா வருவாய் இல்லை.

கோயில் ஊழியர்களுக்கு 2 மாதம் சம்பளப்பாக்கி.

ரிடையர்டு ஆன ஊழியர்களுக்கு பென்ஷனும் கொடுக்கவில்லை.

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிரடி முடிவை எடுத்துள்ளது, திருவாங்கூர் தேவசம் போர்டு.

என்ன முடிவு?

கோயிலுக்குக் காணிக்கையாக வந்த விளக்குகள், ஜார், பவுல்,உள்ளிட்ட பொருட்கள் கிலோ  கணக்கில் உபரியாக உள்ளது .

அதனை விற்று சம்பளப் பாக்கியை செட்டில் செய்ய உத்தேசம்.

’’ கேரள உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற்று இந்த பொருட்கள் விற்கப்படும்’’ என்கிறார், தேவசம் போர்டு தலைவர் என்.வாசு.

– ஏழுமலை வெங்கடேசன்