ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்….!

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு பின் தற்போது, ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். டிசம்பர் 31-ந் தேதி தமிழகமெங்கும் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படத்திற்கு தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனால் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்குமாறு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தனர் ரசிகர்கள்.

இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்த செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.