தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் , வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது .

இந்த படத்தின் Pre Production வேலைகள் தற்போது ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் ஊட்டி , குலுமனாலி உள்ளிட்ட இடங்களில் லோகேஷன் பார்க்கும் வேலைகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வராகவன் – தனுஷ் இணையும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இதை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“8வது முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு யுவன் ஷங்கர் ராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.