“புதுப்பேட்டை 2” குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் செல்வராகவன்….!

https://twitter.com/Chief_Offl/status/1235975528131080193

கடந்த 2008ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை .

அந்த படத்தில் நடிகர் தனுஸின் “கொக்கி குமார்” என்ற கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. மீண்டும் இதுபோன்ற ஒருபடம், அதாவது “புதுப்பேட்டை” (Pudhupettai) படத்தின் இரண்டாவது பாகம் எப்போ வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரு கல்லூரி விழாவில் கலந்துக்கொண்ட செல்வராகவன் புதுப்பேட்டை 2 படத்தை அடுத்து இயக்கப்போவதாக கூறியுள்ளார்.

அந்த மேடையில் செல்வ ராகவன் பேசுகையில், “அடுத்து என்ன படம் பண்ண போறீங்கன்னு நிறைய பேர் கேட்கிறார்கள். சரி உங்களுக்காக சொல்கிறேன். என்.ஜி.கே-வை தொடர்ந்து நான் பண்ணப்போகும் படத்தில் தனுஷ்தான் ஹீரோ. சரி என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது புதுப்பேட்டை 2 பண்ணிடலாம் என்று உறுதி செய்திருக்கிறோம்” என்றார். இதை கேட்டவுடன் அங்கிருந்த மாணவர்கள் கரகோஷங்களை எழுப்பினார்கள்.