டெல்லி:
விமான ஊழியரை தாக்கியதற்கு சிவசேனா எம்.பி ரவீந்திரா கெய்க்வாட் மன்னிப்பு கோரினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட், கடந்த மாதம் 23-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போது விமான ஊழியரை செருப்பால் அடித்ததார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா உள்பட 7 விமான நிறுவனங்கள் விமான நிறுவனங்கள் ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன. ஏர் இந்திய முடிவு சரியானது தான் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூவிற்கு, கெய்க்வாட் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.