சவுதி, ஐக்கிய அரபு எமிரேடுக்கு ஆயுதம் விற்கும் ட்ரம்ப் முயற்சிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடை

வாஷிங்டன்:

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேடுக்கு அவசரமாக ஆயுதங்களை விற்கும் அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தடுத்து நிறுத்தினர்.


ஈரானுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கருத்தில் கொண்டு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேடுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்க அதிபரின் முடிவு தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது.
இந்த வாக்கெடுப்பின் இறுதியில், அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக அதிகமாக செனட் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் அவசரமாக ஆயுதங்களை விற்கும் அதிபர் ட்ரம்பின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

முதல் 2 தீர்மானங்களில் சவுதி அரேபியா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்கு ஆயுதம் விற்பதை தடுப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது.

ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேடு போன்ற நாடுகளுக்கு ஆயுதம் விற்பதை தடுப்பது தொடர்பான தீர்மானமும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.