கோபி:

திருப்பூர் அருகே கோபிசெட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒரு தம்பதியின் ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடு கிறார். அவருடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய பிரசாரத்தின்போது,  பெரியார் நகர் பகுதிக்கு சென்றபோது, அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர்,  தங்கள் குழந்தைக்கு  அமைச்சர் செங்கோட்டையன் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அமைச்சரும், ஆசையோடு குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு, ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார்… இதனால் அந்த தம்பதி அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அருகில் உள்ளவர்கள், அது ஆண் குழந்தை என்பதை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார். உடனே சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பிரசார வேனில் இறங்கி, குழந்தையை மீண்டும் அந்த தம்பதியிடம் இருந்து வங்கி, சந்துணவு அளித்த முதல்வர்  ராமச்சந்திரன் பெயர் சூட்டுவதாக கூறி அறிவித்தார்.

இதைக்கண்ட அங்குள்ள பொதுமக்கள்… அமைச்சர் என்ன நினைப்பில் இருக்கிறாரோ தெரிய வில்லை என்று முனுமுனுத்தனர். ஏற்கனவே பல அதிமுக அமைச்சர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசி வரும் நிலையில், தற்போது அமைச்சர் செங்கோட்டையனும் பெயர் மாற்றி கூறியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.