மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி மருத்துவமனையில் அட்மிட்

கொச்சி:

மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொச்சியில் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக ராம்ஜெத்மலானி வந்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது.

எனினும் 24 மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகின்றனர்.