வாஜ்பாய் ஆஸ்தியைக் கரைக்க சென்ற பாஜக தலைவர்கள் ஆற்றில் விழுந்தனர்.

க்னோ

த்திரப் பிரதேசம் பஸ்தி நதியில் வாஜ்பாய் ஆஸ்தியை கரைக்க சென்ற மூத்த பாஜக தலைவர்கள் படகில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளனர்.

முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் இந்த மாதம் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார்.   அடுத்த நாள் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.    வாஜ்பாய் உடலுக்கு அவர் வளர்ப்பு மகள் தீ மூட்டினார்.   வாஜ்பாயின் அஸ்தியில் ஒரு பகுதி ஹரித்வாரில் உள்ள கங்கையில் கரைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அஸ்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   அந்தந்த மாநில புண்ணீய நதிகளில் அஸ்தி கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஸ்தி நதியில் அஸ்தியை கரைக்க மூத்த தலைவர்கள் படகில் சென்றனர்.

முன்னாள் பாஜக தலைவர் ரமாபதி ராம் திரிபாதி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் திவிவேதி, சட்டப்பேரவை உறுப்பினர் தயாராம் சௌத்ரி, மற்றும் காவல்துறை சூப்பிரண்ட் திலிப் குமார் ஆகியோர் ஒரு படகில்  தொண்டர்களுடன் சென்றனர்.   அந்தப் படகில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் அந்த படகில் இருந்த ஹரிஷ், தயாராம் உள்ளிட்ட சில மூத்த பாஜக தலைவர்கள் நதியில் விழுந்துள்ளனர்.   காவலுக்கு சென்றிருந்த காவல்துறையினர் உடனடியாக நதியில் குதித்து அவர்களை மீட்டுள்ளனர்.  அவர்களுக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என தகவல் வந்துள்ளது.