கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 4 டெல்லி உயர்சிகிச்சை மருத்துவமனைகள்… நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி:

லைநகர் டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அங்குள்ள பிரபல 4 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதனால் அந்த முதியவர் மரணத்தை தழுவினார். இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா இந்தியாவிலும் தலைவிரித்தாடி வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இன்றைய நிலவரப்படி, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  25,004 ஆக உயர்ந்தது, இதுவரை  9,898 நோயில் இருந்து  மீண்டுள்ளனர், 650 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 80 வயது முதியவர் ஒருவர் அங்குள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க முற்பட்டபோது பெரும்பாலான மருத்துவமனைகள் அவரை சிகிச்சைக்கு சேர்க்க மறுத்துவிட்டது. மேலும், ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

மூச்சுத்திணறால் கஷ்டப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் வசதி செய்து தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நோயாளியின் உறவினர்கள்,  மருத்துவமனை வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரும் மரணத்தை தழுவிவிட்டார்.

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த தலைநகரில் உள்ள தலைசிறந்த மருத்துவமனைகளான 4 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கில் கோரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

மருத்துவமே மக்களுக்கான சேவை என்று கூறப்படுகிறது.  ஆனால், சேவையை மறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது  நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது… என்னச்  சொல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்…

Tragic:
COVID19 Patient dies before DelhiHighCourt could hear his petition for a hospital bed with ventilator.
The matter is listed for hearing today. The 80 year old senior citizen was refused a bed by 4 top Delhi hospitals & had then moved the Delhi High Court.