மூத்த காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் காலமானார்: சோனியாகாந்தி அஞ்சலி

டில்லி:

மூத்த காங்கிரஸ் தலைவர் குருதாஸ் காமத் காலமானார். அவரது உடலுக்கு சோனியா காந்தி மருத்துவமனை சென்று  அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் டில்லியில் உள்ள பிரைமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குருதாஸ் காமத் (63)  காலமானார். இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

குருதாஸ் காமத் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் சோனியாகாந்தி

காங்கிரஸ் கட்சியின் ம மூத்த தலைவர்களில் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த குருதாஸ் காமத், மும்பை வடகிழக்கு லோக்சபா தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றவர். ஏற்கனவே மத்திய அரசில் இணை அமைச்சராக பதவி வகித்துள்ள குருதாஸ் காமத், ராஜஸ்தான், குஜராத் மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீப காலமாக இவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஓய்வெடுத்து வந்த நிலையில் இன்று காலை காலமானார்.