3 மாநிலத்தில் தோல்வி பயம்: நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மோடி திட்டம்….ஜெய்பால் ரெட்டி

டில்லி:

‘‘மத்திய பிரேதசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வி அடையும் என்பதால் நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. ஊனத்துடன் தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி விரும்பமாட்டார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,‘‘3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலில் பாஜக பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கவுள்ளது. இதற்கான காரணங்கள் மிக எளிது. மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாஜக.வுக்கு இழப்பு அதிகமாக இருக்கும். அதன் பின்னர் மோடி இந்த நாட்டு மக்களை எதிர்கொள்ள முடியாது. அதனால் இந்த 3 மாநில தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க மோடி தயாராக இல்லை.

இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தலை நடத்தும் முடிவை அவர் எடுக்க நேரிடும். ஊனத்துடன் அவர் தேர்தலை சந்திக்கமாட்டார். அரசியலில் எதுவும் நிரந்தரம் என்று யாரும் கூறிவிட முடியாது. தேர்தலுக்கு முன்னரே பாஜக.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்.

தேர்தலுக்கு பின்னர் இவர்கள் இணைவதை விட முன்னரே ஒன்று சேர வேண்டும். இதன் மூலம் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் கட்சியோடு ஒத்துக்போகாத மாநில கட்சிகள் தனித்து போட்டியிட்டுவிட்டு, தேர்தலுக்கு பின்னர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இது போன்ற நிலை ஒரு சில மாநிலங்களில் தான் உள்ளது’’ என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3 மாநிலத்தில் தோல்வி பயம்: நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த மோடி திட்டம்....ஜெய்பால் ரெட்டி, Rajasthan and Chhattisgarh Assembly elections, senior Congress leader S Jaipal Reddy claimed that early Lok Sabha polls were possible as the BJP was likely to lose Madhya Pradesh
-=-