ஆயுதப்படைகளின் தலைமை இயக்குனராக குமார் ராஜேஷ் சந்திரா நியமனம்! மத்திய உள்துறை நடவடிக்கை

டில்லி:

யுதப்படைகளின் தலைமை இயக்குனராக குமார் ராஜேஷ் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள் ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ளது.

1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ்-ஐ சேர்ந்தவரான குமார் ராஜேஷ் சந்திரா இந்த பதவியில் 2021ம் ஆண்டு டிசம்பர் வரை பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவித்து உள்ளது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியான குமார் ராஜேஷ் சந்திரா கடந்த 2016ம் ஆண்டு மே 5ந்தேதி சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அங்கிருந்து பதவி உயர்வு பெற்று ஆயுதப்படைகளின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.