காஜியாபாத்

த்தீஸ்கர் அமைச்சர் ஒருவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரான வினோத் வர்மா பிபிசி மற்றும் அமர் உஜாலா போன்ற புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களில் பணியாற்றியவர்.   பத்திரிகை உலகில் தனக்கென ஒரு நற்பெயரைக் கொண்டவர்.  தற்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பகத் இடம் செய்தித் தொடர்பாளராக பணி புரிந்து வருகிறார்.   கடந்த 2016ஆம் வருடம் மார்ச் மாதம் வர்மாவும் அவரது சக பத்திரிகையாளர்கள் இருவரும் பத்திரிகையாளர்கள் பொய்க் குற்றத்தின் பேரில் கைது செய்து மிரட்டப்படுவதைக் குறித்து விசாரணை ஒன்று நடத்தி வந்தனர்.

தற்போது இவர் இன்று அதிகாலை ராய்பூர் போலிசாரால் அவரது காஜியாபாத் இல்லைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இதற்கு காரணமாக போலிசார், “பா ஜ க வை சேர்ந்த தலைவர் பிரகாஷ் பஜாஜ் தன்னை பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.   அவர் அளித்த புகாரின் படி ஒரு செய்தியை விசாரிக்கும் போது வினோத் வர்மாவிடம் பா ஜ க பிரமுகரான பிரகாஷ் பஜாஜ் உள்ளதாக கூறப்படும் ஒரு பாலியல் வீடியோ சிக்கி உள்ளது.   அது குறித்து தொலைபேசியில் பேசிய ஒருவர் பிரகாஷ் பஜாஜை மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளார்.    இல்லை எனில் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவதாக பிளாக் மெயில் செய்துள்ளார்.   விசாரணையில் அந்த தொலைபேசி செய்த நபர் வினோத் வர்மாவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்.  அதன் படி வினோத் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.    அவரது வீட்டிலிருந்து 500 சிடிக்கள், பென் டிரைவ்கள், ஒரு மடிக்கணினி, மற்றும் ஒரு டைரி ஆகியவற்றை கைப்பற்றி உள்ளோம்.   அதில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு வருகிறது.” என தெரிவித்தனர்.

இந்த கைதுக்கு டில்லியை ஆளும் ஆம் ஆத்மிக் கட்சி செய்திதொடர்பாளர் அசுதோஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.