ஸ்டாலினின் கிராமசபா கூட்டம் குறித்து கேள்வி எழுப்பிய கமலுக்கு மூத்த பத்திரிகையாளர் ‘பளீச்’ பதில்

நெட்டிஷன்:

பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் டிவிட்டர் பதிவு

சென்னை ஆர் ஏ புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையா விமர்சனம் செய்தார். திமுக சார்பில் நடத்தி வரும் கிராம, ஊராட்சி சபா கூட்டம் விமர்சித்து பேசிய கமல், இத்தனை வருடம் கிராம சபை இருப்பது உங்களுக்கு தெரியாதா? நேற்று வந்த நாங்கள் மக்களை சந்தித்ததை பார்த்து  காப்பி அடிக்கிறீங்க? வெக்கமா இல்ல உங்களுக்கு? என்று  கடுமையாக விமர்சித்தார். தி.மு.கவை விமர்சிக்க தி.மு.கவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே விமர்சிக்கிறேன் என்றார்.

கமலில் விமர்சனம் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்,  மு.க.ஸ்டாலின் கடந்த 2010ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டார் என்றும், 4 முறை கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார் என்று தெரிவித்து, அதனுடன் ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தின் படத்தையும் பதிவிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் உண்மைகளை தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்றவர், அந்த சமயத்தில்தான்  இந்தியாவில்தான் இருந்தேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.