பாலியல் புகார் எதிரொலி: அவமானம் தாங்காமல் கபடி பயிற்சியாளர் தற்கொலை

பெங்களூரு:

ன்னிடம் கபடி பயிற்சி பெற்று வந்த 13வயது பெண், பாலியல் புகார் கூறியதால், அவமானம் தாங்காமல் பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் மூத்த கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி. இவர் நேற்று பெங்களூருவில் உள்ள  ஓட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கர்நாடக விளையாட்டுத் ஆணையத்தில்  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ள பெங்களூருவில், இங்கு மூத்த கபடி பயிற்சி யாளராக  பணியாற்றி வந்தவர் ருத்ரப்பா ஹோசாமனி. தற்போது  59-வயதை எட்டியுள்ள அவர்மீது கடந்த வாரம், அவரிடம் பயிற்சி பெற்று வந்த 13-வயது சிறுமி பாலியல் புகார் கூறினார்.

தான் உடைமாற்றும் போது, தனது அறைக்குள் வந்து ருத்ரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் ருத்ரப்பா மீது தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக புகாரும் கொடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, ருத்ரப்பாவை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து விளையாட்டுத்துறை உத்தரவிட்ட நிலையில்,  பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அறை எடுத்து தங்கிய அவர், அங்கு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ருத்ரப்பா தற்கொலை செய்து கொண்ட அறையை சோதனை செய்த காவல்துறையினர், அறையில்  இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.  அதில், “தற்கொலை செய்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இப்போது எந்த நிலையிலும் உதவியில்லாமல் உள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என மகனிடம் கேட்டுள்ள ருத்ரப்பா, தனது உடலை தானம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.