டில்லி நீதிமன்றத்தில் கொடுமை: பெண் வழக்கறிஞரை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த வழக்கறிஞர்

டில்லி:

லைநகர் டில்லியில்  நீதிமன்ற வளாகத்தினுள் உள்ள வழக்கறிஞர் அறையில் பெண் வழக்கறிஞர் ஒருவரை மூத்த வழக்கறிஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு டில்லியின் சாக்கெட் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞரின் அறையில்  இந்த கொடுமையான சம்பவம் நடை பெற்றுள்ளது. இந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தெற்கு டெல்லியின் சாக்கெட் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்தில் வழங்கறிர்களுக் கான அறைகளும் உள்ளது. சம்பவத்தன்று  பெண் வழக்கறிஞர் ஒருவர் அறைக்கு குடிபோதையில் வந்த  மூத்த வழக்கறிஞர் ஒருவர் பெண் வழக்கறிஞரை  பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

பரபரப்பை ஏற்படுத்திஉள்ள இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து இந்தசம்பவம் வெளிஉலகுக்கு தெரிய வந்ததுள்ளது.

பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் சுமார் 32 வயது உள்ளவர் என்றும், பாலியல் தொல்லை கொடுத்த மூத்த வழக்கறிஞர் 50 வயதான  பி.கே.லால் என்பதும் தெரிய வந்ததுள்ளது.

இதுகுறித்து புகார் பதிவு செய்துள்ள காவல்துறை ஆய்வாளர், குடிப்போதையில் வந்த மூத்த வழக்கறிஞர் பெண் வழக்கறிஞரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெண் வழக்கறிஞரிடம் இருந்து ஒலி வடிவ வாக்குமுலம் பெறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞரினை இவ்வழக்கு தொடர்பாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்த அறைக்கு காவல்துறையினர் சீல் வைத்து சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூத்த வழக்கறிஞர் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், தற்போது கைது செய்யப்பட்டிருப்ப தாகவும், பாதிக்கப்பட்ட பெண்  ழக்கறிஞரின் புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புகாரில் சிக்கிய வழக்கறிஞரை பார் கவுன்சில் சஸ்பெண்டு செய்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திலேயே பெண் வழக்கறிஞர் ஒருவரை சக வழக்கறிஞரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.