விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது தூங்கி வழிந்த பைலட்..!

சீனாவுக்கு சொந்தமான விமானத்தை ஓட்டி சென்ற விமான நடுவானில் தூங்கிய சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான தூங்கி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

pilot\

சீனா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மூத்த விமானி ஒருவர் போயிங் 747 விமானத்தை இயக்கி உள்ளார். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, தனது கட்டுப்பாட்டை இழந்த விமானி தூங்கி உள்ளார். விமானியிடம் இருந்து எந்தவித சைகையும் வராததால் அருகில் இருந்த இணை விமானி கவனித்த போது அவர் தூங்கியது தெரிய வந்தது.

மூத்த விஞ்ஞானி விமானத்தை நடுவானில் இயக்கும் போது தூங்கியதை இணை விமானி வீடியோ எடுத்துள்ளார். அதன் பிறகு அவர் விமானியை தட்டு எழுப்பியுல்ளார். விமானி நடுவானில் தூங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து 20 ஆண்டுகள் விமானம் ஓட்டுவதில் அனுபவமிக்க அந்த விமானியை சீனா ஏர்லைன்ஸ் நிறுவனம் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சீனா உள்ளூர் செய்திகளில், விமானத்தை இயக்கிய விமானி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தூங்கியதாக கூறப்பட்டுள்ளது.