Random image

நைட்டி உடையுடன் செய்தியாளர்களிடம் தகறாறில் ஈடுபட்ட வனிதா….

சென்னை:

கள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற  பத்திரிகையாளர்களிடம் வனிதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்டியடித்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை போரூர் அருகே உள்ள  ஆலப்பாக்கம்  அஷ்டலட்சுமி நகரில் மூத்த நடிகர் விஜயகுமாருக்கு சொந்த மான வீடு ஒன்று உள்ளது. இங்கு திரைப்படங்கள் எடுப்பதற்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இந்த வீட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகுமார் மகள் வனிதா படப்பிடிப்புக்காக வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தும், அவர் வீட்டை காலி செய்யாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,  நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் வனிதா வீட்டிற்கு சென்று செய்தி சேகரிக்க சென்றபோது, நைட்டியுடன் வெளியே வந்த வனிதா, செய்தியாளர்களிடம் தகாத வார்த்தைகளால் கூறி விரட்டிடியத்தார்.   இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டிகர் விஜயகுமார்-மஞ்சுளாவின் மகள்களில் ஒருவரான வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோர் மீதும், சகோதரர் நடிகர் அருண்குமார் மீதும் புகார் அளித்தது நினைவிருக்கலாம். அப்போது இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த மஞ்சுளா,  மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ரொம்பவே பாதிப்படைந்து மரணத்தை தழுவினார். இந்த   நிலையில், தற்போது விஜயகுமார் குடும்ப  விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.