Random image

கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய மூத்த தமிழறிஞர் பச்சையப்பன் மரணம்!

சென்னை:

ணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய மூத்த தமிழறிஞர் பச்சையப்பன் காலமானார்.

புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பச்சையப்பன் சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு வயது 85.  வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் தமிழறிஞர் மட்டுமல்லாது கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர். நாளிதழ்களில் சமஸ்கிருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்பியவர் பச்சையப்பன். அதுபோன்று  கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்குவதில் அவரின் பங்கு மகத்தானது என்று கூறப்படுகிறது.

குடும்பம் பிரச்சினை தொடர்பான சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் வந்துபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை உடடினயாக  போலீசார் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.