நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிப்பு! கொலிஜியம் முடிவுக்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி எதிர்ப்பு

டில்லி:

ச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுவதாக மூத்த நீதிபதி பானுமதி குற்றம் சாட்டி உள்ளார்.

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி உள்பட பல மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாற்று வது தொடர்பாக  உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பு முடிவு செய்து மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதில் மூத்த நீதிபதியான சென்னை உயர்நீதி மனற் தலைமை  தஹில்ரமணி, மேகாலாய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சீனியாரிட்டி புறக்கணிக்கப்படுவதாக உச்சநீதி மன்ற மூத்த நீதிபதி பானுமதி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

நீதிபதி பானுமதி தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற முதல் தமிழ்ப் பெண். இவர் தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் 1955-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1981-ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். கடந்த 1988ம் ஆண்டில் தனது 33வது வயதில் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சியில் நீதிபதியாக பணியாற்றியபோது நாட்டையே உலுக்கிய பிரேமானந்தா சாமியார் வழக்கை விசாரித்தார். அந்த வழக்கில் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், ரூ.67 லட்சம் அபராதம் விதித்தும் பரபரப்பான தீர்ப்பை வழங்கி பிரபலமானார்.

கடந்த 2003 ஏப்ரல் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பானுமதி நியமிக்கப்பட்டார். பின்னர், 2013ம் ஆண்டு நவம்பர் 12ல் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி பானுமதி, தமிழகத்திலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.

இவர் உச்ச நீதிமன்றத்தில் 2020 ஆண்டுகள் வரை நீதிபதியாக பணியாற்றுவார்.