சென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை

சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல்  அதிகரித்து வருகிறது.  இன்று மட்டும் 2,124 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  தற்போது சென்னையில் 15,761 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   கொரோனா பாதிப்பு விவர ஆய்வாளர் விஜய் ஆனந்த் இன்று டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் காணப்படுவதாவது.

கடந்த நான்கு வாரங்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வயதுவாரியான விவரங்கள்

  1. மொத்த பாதிப்பில் 20.4% பேர் 30 முதல் 39 வயதுக்குள்ளானவர்கள் ஆவார்கள்.  இவர்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  2. 19 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 7% ஆக உள்ளது.
  3. பிறந்த குழந்தை முதல் 9 வயது ஆன சிறார்கள் எண்ணிக்கை 23லிருந்து 218 ஆக உயர்ந்துள்ளது.
  4. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 55% ஆக உள்ளது
  5. 80 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 57 லிருந்து 268 ஆகி உள்ளது

இந்த கணக்கெடுப்பு கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 10 வரையிலான எண்ணிக்கை அடிப்படையிலானது.

Thanks : Vijayanand Twitter page