பங்கு சந்தை கடும் வீழ்ச்சி: மோடி அரசுமீது நம்பிக்கையில்லாததையே காட்டுகிறது! ராகுல்காந்தி

--

டில்லி,

ங்குசந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருப்பதற்கு காரணம், மோடி அரசு மீது  நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

கடந்த 1ந்தேதி மத்தியநிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த  பட்ஜெட்டில், பங்குசந்தை சார்ந்த முதலீடுகளுக்கு நல்ல லாபம் ஈட்டப்பட்டு வருவதாகவும், எனவே, மூலத்தனத்திற்கு கிடைக்கும் லாபத்திற்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நீண்டகால முதலீடு மீதான லாபத்தில், 1 லட்ச ரூபாய்க்கும் அதிக லாபம் பெற்றால், அதில் 10 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும் என்ற செய்தி,  இந்திய முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. இதுவே சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய பங்கு சந்தை வரலாறு காணாத அளவில் சரிந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், பங்கு சந்தையின் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவடைந்துள்ளது,  பிரதமர் மோடி அரசு மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து விட்டதை தெளிவுபடுத்துகிறது என்று கூறி உள்ளார்.