இந்தியப் பங்கு சந்தை 800 புள்ளிகள் உயர்வு – காரணம் என்ன?

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை 800 புள்ளிகள் அளவிற்கு உயர்ந்து, இந்தாண்டில் இரண்டாவது அதிக உயர்வைக் கண்டுள்ளது.

உள்நாட்டில் நிலவும் சூழல் மற்றும் உலகளாவிய சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 20ம் தேதி, மக்களவைத் தேர்தல் முடிந்து, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணியே அமோக வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியிருந்த நேரத்தில், மே மாதம் 20ம் தேதி இந்தியப் பங்குச் சந்தை 1422 புள்ளிகள் உயர்ந்தது.

அதற்கடுத்து இப்போதுதான் அதிகபட்ச உயர்வு காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் செலுத்தும் வரிகளின் மீது விதிக்கப்படும் சர்ச்சைக்குரிய கூடுதல் கட்டணங்களைத் திரும்பப் பெறுவது என்று மத்திய அரசின் முடிவு மற்றும் இதர சில காரணங்களை காரணமாக வைத்து இந்தப் பங்கு சந்தை உயர்வு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

You may have missed