விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளித்தது சென்சார் போர்டு.

சென்னை:

டிகர் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்திற்கு சென்சார் போர்டு  யு/ஏ சான்றிதழ் அளித்ததுள்ளது. இதை படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்து உள்ளது.

துப்பாக்கி, கத்தி திரைப்படத்திற்கு அடுத்து 3வது  முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு சர்க்கார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன்  கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில்  பிரம்மாண்டமாக நடை பெற்றது. அப்போது   நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சர்க்கார் படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் பட வேலைகள் முடிவுற்று, சென்சார் போர்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.