சென்னை:

மிழக சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி முதல்வர் எடப்பாடி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவையில்  இன்று  எரிசக்தி மற்றும் மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய  மின்துறை மானியக் கோரிக்கையின் போது திமுக சார்பில் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ பேசினார். அப்போது,  முதலமைச்சர் குறித்து செந்தில்பாலாஜி தெரிவித்த கருத்தால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அவரது பேச்சை எதிர்த்து  அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜி,  திமுகவையும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் செந்தில் பாலாஜி புகழ்ந்து பேசிய போது அமைச்சர் உதயக்குமார் குறுக்கிட்டார்.

செந்தில் பாலாஜி எந்த குற்றசாட்டையும் சுமத்தாத போது அமைச்சர் குறுக்கிடுவது நியாயமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

இதைத்தொடர்ந்து  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.