டிஎஸ்கே படக் குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடினார் செந்தில்!

‘தானா சேர்ந்த கூட்டம்’ (Thaanaa Serndha Koottam #TSK ) படக்குழுவினருடன் தனது 66வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார் நடிகர் செந்தில்.

 

டைரக்டர்  விக்னேஷ் சிவன் படத்தில்  சூர்யா – கீர்த்திசுரேஷ் இணைந்து நடித்து வரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவனின் மூன்றாவது படம் இது.

இந்தப் படத்தில் சி.பி.ஐ அதிகாரியாக நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் செந்தில் முக்கிய ரோலில் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு  அனிருத் இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில், தனது 66-வது பிறந்தநாளை டிஎஸ்கே  படக் குழுவினருடன் நேற்று கொண்டாடினார்.

Leave a Reply

Your email address will not be published.