போன் வந்தால் எடுத்துப் பேசத் தெரியும். இந்த ட்விட்டர் கிட்டர் எல்லாம் தெரியாது : நடிகர் செந்தில்

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள இந்த சூழலில் பலரும் சமூக வலைதளத்தின் தாக்கத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே நேற்று மே 5 அன்று மாலை நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.அதில் அவருடைய பெயரில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது . @senthiloffl என்ற பெயரில் அந்த ட்விட்டர் கணக்கு இருந்தது.

இது தொடர்பாக நடிகர் செந்திலிடம் பத்திரிகை சார்பாக ஒருவர் பேசியபோது, “தம்பி.. எனக்கு போன் வந்தால் எடுத்துப் பேசத் தெரியும். இந்த ட்விட்டர் கிட்டர் எல்லாம் தெரியாது. அதெல்லாம் யாரோ ஆரம்பிச்சது. நமக்கு அதில் எல்லாம் கணக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.