மோடிக்கு அமைதி விருது: கொரியாவில் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடிக்கு “சோல் அமைதி விருது” அளிப்பதை எதிர்த்து கொரியாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்கொரியா அரசின் சார்பாக சர்வதேச அளவில் அமைதிக்காக உழைத்த ஒருவருக்கு 2வருடங்களுக்கு ஒருமுறை சியோல் அமைதிக்கான விருது அளிக்கப்படுகிறது. . 1990-ம் ஆண்டு முதல் இவ்விருது அளிக்கப்பட்டு வருகிறது. விருது தேர்வுக் குழுவில் கொரியாவைச் சேர்ந்த 300 பேரும், மற்ற நாடுகளைச் சேர்ந்த 800 பேரும் இடம்பெற்றிருப்பார்கள்.
இதுவரை, ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான், பான் கி மூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் போன்ற சர்வதேச தலைவர்களுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதிக்கான விருதை கொரிய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தங்கள் நாட்டு அரசு மோடிக்கு விருது அறிவித்ததை எதிர்த்து கொரிய என்.ஜ.ஓ. அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென் கொரிய தலைநகரான சியோலில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தயவர்கள், “சோல் அமைதி விருது என்பது மிகவும் புனிதமான விருதாகும். அவ்விருதை தகுதி இல்லாதவர்க்கு அளிப்பதை நாங்கள் ஏற்கவே மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய பிரதமர் மோடி இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல.
அவர் 2002ம் வருடம்ல் குஜராத் முதல்வராக இருந்த பொழுது இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் அங்கு நடந்தது.அப்போது அரசின் நடவடிக்கை மிக மோசமாக இருந்தது. அதனால் அப்பாவி இஸ்லாமிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள்” என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் பிரதமர் மோதியை கொரியாவின் முன்னாள் அதிபரான சர்வாதிகாரி சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கம் எழுப்பினர். அதிபர் சுன்-டூ-வான் என்பவர் 1980 ம் ஆண்டில் தான் அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்.
மேலும், “இந்த விருது பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிப்பதாகும். ஆகவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்கள்.