வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு கிம் ஜாங் உன் அழைப்பு

போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு வருமாறு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

pope_francis

வாடிகனில் உள்ள போல் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த அழைப்பு தென் கொரிய அதிபர் மூன் ஜே மூலம் போப் ஆண்டவருக்கு தெரிவிக்க உள்ளது.

இந்நிலையில் அடுத்தவாரம் தென் கொரிய அதிபர் மூன் ஜே வாடிகன் செல்ல உள்ளதால் அவர் வடகொரிய அதிபரின் அழைப்பை தெரிவிப்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடிகனுக்கும், வடகொரியாவுக்கும் புதிய உறவை ஏற்படுத்தும் விதமாக இந்த அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போப் ஆண்டவர் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் உல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பால் வடகொரியா வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று இரண்டாம் ஜான் பால் வடகொரியாவிற்கு வருகை தந்தார். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.