கொரோனா : 24 ஆம் தேதி தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்குத் தனித் தேர்வு

சென்னை

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 24 ஆம் தேதி தேர்வு எழுதாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகத் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 24 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 11 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

24 ஆம் தேதி நடந்த தேர்வில் ஊரடங்கு உத்தரவு நேரம் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றால் சுமார் 34,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவில்லை.

அவர்களுக்கு வேறொரு நாளில் தனியாகத் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அந்த தனித் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

You may have missed