ற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாகும்.
இதனை இடித்து விட்டு 862 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் பூஜையுடன் கட்டுமான பணி ஆரம்பமாகிறது. வரும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

அதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உருவாகிவிடும். இந்த புதிய கட்டிடத்தில் ஒவ்வொரு எம்.பி.க்கும் தனித்தனி அலுவலகம் இருக்கும். காகித பயன்பாட்டை முழுவதுமாக ஒழித்து விட்டு, இந்த அலுவலகம் ‘டிஜிட்டல்’ மயமாக்கப்படும்.
எதிர்காலத்தில் எம்.பி.க்கள். எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்பதால், மக்களைவையில் 888 எம்.பி.க்கள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படும்.
மாநிலங்களவையில் 385 எம்.பி.க்கள் உட்காரும் வகையில் இருக்கை வசதி செய்யப்படுகிறது.
தற்போது மக்களவை எம்.பி.க்கள் 543 பேர் உள்ளனர்.
மாநிலங்களவையில் 245 எம்.பி.க்கள் உள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும் பொறுப்பு டாடா கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-பா.பாரதி.