தனித்தமிழ்நாடு கேட்பது தேசத்துரோகம் அல்ல!: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு

 

திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, “தனித்தமிழ்நாடு கோருவது தேசத்துரோகம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில், நெறியாளர் நிஜந்தன் நெறிப்படுத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து இன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்களை ஒட்டி இந்த விவாதம் நடந்துவருகிறது.

அதிமுக சார்பாக பேசிய ராதாகிருஷ்ணன் என்பவர், “ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூகவிரோதிகள் கலந்துவிட்டார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். முதல்வர் படத்தை வைத்து அவர் இறந்துவிட்டார் என்று எழுதி வைத்தார்கள், தனித்தமிழ்நாடு முழக்கம் எழுப்பினார்கள்” என்றார்.

அதற்கு பதில் அளித்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு “தனித்தமிழ்நாடு கேட்பது என்ன தேச துரோகமா? அண்ணா காலத்திலேயே தனித்தமிழ்நாடு (இதை திராவிட நாடு என அதிமுக  ஆதரவாளர் ராதாகிருஷ்ணன் திருத்தினார்) கேட்டு போராடினார்களே… தனது கருத்தை முன்வைககிறார்கள்… உடனே அது தேச துரோகம் ஆகிவிடுமா.. அப்படியெல்லாம் இல்லை” என்று தெரிவித்தார்.