லண்டன்:

காற்று மாசுப்பசுவதை குறைக்கும் வகையில் கார்களுக்கு தனி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை  வசூலிக்கும் நடவடிக்கையும்  அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாகனங்கள் மற்றும் ஆலைகளால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல்வேறு யுத்திகள் கையாளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், லண்டனில் காற்று மாசுபடுவததை குறைக்கும் வகையில் அந்நகருக்குள் நுழையும் பழைமையான  புகை கக்கும் வாகனங்களுக்கு வரி விதிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி இந்திய ரூபாய் மதிப்பில்  850 ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

இவ்வரி குறித்து லண்டன் மாநகர மேயர் சாதிக் கூறும்போது,  வரி மூலம் குறைவான புகையினை ஏற்படுத்தும் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவது அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும்,  இதன் காரணமாக  உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்றும், லண்டன், பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 12 நகரங்கள் 2030 ஆம் ஆண்டு முதல் காற்று மாசு ஏற்படுத்தாத பேருந்துகளை மட்டுமே இயக்கப் போவதாகவும்  அறிவித்துள்ளன.

சமீபத்தில் தி லான்செட் மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ள  ஆராய்ச்சி முடிவுகளின்படி,  உலகில்  ஏற்படும் நோய்களுக்கும், இறப்புகளுக்கும் மாசடைந்த சுற்றுசூழலே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.