காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிப்பு…!

--

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஹூரியத் உறுப்பினர்கள் இருப்பதற்கு காஷ்மீர் பிரிவினைவாத தாலைவர் சையத் அலி ஷா கிலானி தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தார்.

ஆனால் அவருக்கு, பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான் – எ – பாகிஸ்தான் என்ற விருதை அந்நாட்டு அரசு வழங்கி இருக்கிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது.

இந்நிலையில் இந்தியாவை சீண்ட இப்படி ஒரு விருதை கிலானிக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது. இம்ரான் கான் தலைமையிலான அரசு, அரசியல் சட்டப்பிரிவு 370ம் பிரிவை நீக்கிய, ஆகஸ்டு 5ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.