கொரோனா தொற்று சிகிச்சைக்காக 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகள்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 17 மாநிலங்களில் தனி மருத்துவமனைகளைக் கட்டும் பணி துவங்கியள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதற்கான சிறிய அறிகுறிகூட இல்லை.

கொசுக்களால் கொரோனா பரவுகிறது என்பது தவறு. நாம் சமூக விலக்கலை 100% முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனா பரவலை ஒழித்து விடலாம். ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே மக்கள் இருந்தாலே போதும் கொரோனா கட்டுப்படும்” என்று பேசியுள்ளார்.

அதேசமயம், இந்தியாவில் உண்மையிலேயே இருக்கும் கள நிலவரங்களுக்கும், அரசு தெரிவிக்கும் புள்ளி விபரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற விமர்சனங்களும் இருந்து வருகிறது.

மேலும், சீனாவை கொரோனா ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் மத்திய அரசு எந்தக் கவலையோ, முன்னேற்பாடோ இன்றி மெத்தனமாக இருந்தது என்ற விமர்சனமும் உண்டு.