செப்டம்பர்-11: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட தினம் இன்று!

நியூயார்க்:

மெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த மிக உயரமான இரட்டை கோபுரங்களை கொண்ட கட்டிடமான, உலக வர்த்தக மையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட  தினம் இன்று.

110 அடுக்கு மாடிகளை கொண்ட  இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய 18-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த 110 அடுக்கு மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி விமானங்களைக் கொண்டு மோதி கொடூர தாக்குதல் நடத்தினர்.

உலகின் வர்த்தக மையமாக விளங்கிய அந்த 2 கோபுரங்களும் அடுத்தடுத்த விமான தாக்குதல் களால் முற்றிலும் நிலை குலைந்து சீட்டுக் கட்டுகள் போல் சரிந்து மண்ணோடு மண்ணாகின. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூரத் தாக்குதலில், 2997 அப்பாவி கள் கொல்லப்பட்டனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில்  பலர் நடமாட முடியாத நிலையிலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் உடல் அடையாளம் தெரியாத நிலையிலும் உள்ளது. இத்தாக்குதல்கள் மூலம் அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் (ரூ.67 ஆயிரம் கோடி) வரை இழப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில்,  உயிர் பிழைத்த நூற்றுக் கணக்கானோர் அதன் தாக்கத்தில் இருந்து மனதளவில் மீளாமல் வாழ்ந்து வருகின்றனர். அல்-கொய்தா தீவிரவாதிகளால் இடித்து தரைமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிட இடிபாடுகள் கடந்த 2002-ம் ஆண்டு மே மாதம் வரை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

விமானம் மூலம் மோதி சேதப்படுத்தப்பட்ட பென்டகன் கட்டிடம் ஒரு வருடத்தில் சீரமைக்கப் பட்டது. ஏற்கனவே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் இருந்த பகுதியின் அருகே 2006-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி புதிதாக ஒரு உலக வர்த்தக மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அக்கட்டிடம் கட்டும் பணி 8 ஆண்டுகள் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

தாக்குதல்கள் நடந்த இடங்களில் தற்போது நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நியூயார்க்கில் தேசிய செப்டம்பர் 11 நினைவகம் மற்றும் அருங்காட்சியகமும், வெர்ஜீனியா ஆர்லிங்டன் கவுன்டியில் பென்டகன் நினைவகமும், பென்சில்வேனியா ஷாங்ஸ்வில்லே அருகே உள்ள ஸ்டோனி கிரீக் டவுன் ஷிப்பில் பிளைட் 93 தேசிய நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட நினைவு தினமான இன்று  (11-ந்தேதி) அங்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.