Random image

செப்டம்பர் 17: வன்னியர்களின் சமூகநீதி போராட்டம் நடைபெற்ற நாள் இன்று

1987 செப்டம்பர் 17ந்தேதி அன்று வன்னிய மக்களின்  சமூகநீதி போராட்டம்  நடைபெற்ற நாள் இன்று. ! ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்திய மாபெரும் தியாகப் போராட்டம் நடைபெற்ற நாள் ஆகும். அன்று நடந்த போராட்டத்தால் இன்று ஒவ்வொரு வன்னியர் குடும்பமும் பயன் அடைந்துள்ளது. வன்னியர்கள் மட்டுமல்ல. கூடவே மீனவர், மறவர், குலாலர் உள்ளிட்ட மேலும் 107 சாதிகள் பயனடைந்துள்ளனர்.

ந்திய வரலாற்றிலேயே ஒரு சமுதாயம் அடக்குமுறைகளை மீறி தன்னெழுச்சி பெற்று தன் உரிமைக்காக குரல் கொடுத்த தினம் இன்று.

21தங்கங்கள் தங்களின் இன்னுயிரை கொடுத்து இனஎழுச்சிக்காகவும், இனமுன்னேற்றத்திற்காக வும் உயிரை அர்பணித்துக் கொண்ட தினம்.

1987ல், சாலை மறியல் போராட்டத்தில், நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி குண்டுகளை வாங்கி சமுதாயத்தைச் தலை நிமிர வைத்தனர் இருபத்தி ஓர் பேர். ஆனால் இந்த எழுச்சிக்கும், தியாகத்திற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லாத ஒரு கூட்டம், தங்களது சுயநலத்திற்காக, ஒரு சமுதாய வளர்ச்சியையே முடக்கி கிடப்பில் போட்டது.

சரி,உயிரை நீத்த தியாகிகளின் குடும்பங்களாவது, ஏதாவது பலன் பெற்றனரா என்றால் அதுவும் சோகக் கதை தான்.தகுதியான வேலைவாய்ப்பின்றி, ஏழ்மை நிலையிலேயே கிடந்தது தியாகி களின் குடும்பங்கள்.பின்னர் 1997 ல் ,பா.ம.க விலிருந்து காழ்ப்புணர்ச்சியால் நீக்கப்பட்ட பேராசிரியர் தீரன் அவர்கள் தமிழ் பா.ம.க. வை தொடங்கினார்.

பின்னர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்றரை இலட்சமும், மாதாந்திர ஒய்வூதியமும், பேராசிரியர் தீரன் வாங்கித்தந்ததை ஒவ்வொருவரும் வன்னியரும் அறிவோம். ஆனால், அந்த சுயநலகும்பல், அந்தப் பணத்திலும் எழுப்பத்தைந்தாயிரத்தை வழக்காடி யதற்கான கட்டணம் என்று சொல்லி திருப்பி வாங்கி சுகம் கண்டதை எந்த வன்னியரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பத்து வருடங்களாக, பதவி மற்றும் பணத்திற்காக, கொள்கையின்றி, சமுதாய சிந்தனை சிறிதளவும் இன்றி, வெளியிலிருந்து திமுக மற்றும் அதிமுக வை மாறி மாறி ஆதரித்த இந்த நயவஞ்சகத்தை குடும்பம், ,இரயில்வே துறை மற்றும் சுகாதாரத்துறை போன்ற துறைகளில் இருந்தும் கூட, வன்னியர்களுக்கென்று ஒரு வேலை வாய்ப்பும் பெற்றுத் தராமல், அவ்வேலைகளை எல்லாம், காண்ட்ராக்ட் முறையில் ஏலம் விட்டும், தங்களைச் சுற்றி செட்டியார்களையும், மார்வாடிகளையும் வைத்துக் கொண்டு, பல்லாயிரம் கோடிக்கணக்காக பணத்தை சம்பாதித்ததை அனைத்து வன்னியர்களும் நன்கு அறிவர். கனிசமான சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தும்கூட, வன்னியர் நல வாரியம் அமைப்பது பற்றியோ அல்லது உள் ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்காகவோ, சட்டமன்றத்தில் கின்னியளவுகூட முயற்சி எடுக்காமல், தங்களது குடும்பம், சுற்றம், சுயநலபலனிற்காக மட்டுமே பிழைப்பு அரசியலை மேற்கொண்டதை ரோசம், மானம், வீரமுள்ள வன்னியர்கள் அனைவரும் அறிவர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னிய மக்களால் புறக்கணித்தபோதும், டயர்நக்கிகள் என்று பாகுபலி போல் ஆவேசமாக பேசிவிட்டு, பதவிக்காக, வன்னிய குலத்திற்கென்று இருக்கும் வீரம் சிறிதளவுமின்றி, அந்த டயர்களையே நக்கியதை ஒவ்வொரு வீரவன்னிய இளைஞனும் மறந்திருக்க மாட்டான்.

இன்று மாவீரனின் மணிமண்டப திறப்பு விழாவில், சிறிதளவும், கூச்சநாச்சமின்றி, பிற சமுதாயத் தினர்கள் தமக்குள் விமர்சனம் செய்து கொள்வதில்லை என்றும், தாழ்த்தி பேசிக் கொள்வதில்லை என்றும் நெஞ்சுருக பேசுவதைப்பார்க்கும் போது 23ஆம் புலிக்கேசியை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. உட்கட்சி கூட்டத்திலேயே ,கலந்துரையாடலிலேயே சக உறுப்பினர்களுக்கு எவ்வளவு கருத்துக் சுதந்திரம் அளிப்பவர்கள் இவர்கள் என்பதை வீர வன்னியர்கள் உரைத்தால் தான் தெரியும்.மேலும் வன்னிய சங்க காலத்திலிருந்தே உழைத்த மூத்த தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டி,கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு, உழைத்து கட்சியை வளர்த்தவர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ,கட்சியை விட்டே நீக்கிவிட்டு , தங்களது சுயநல அரசியலுக்கெதிரான வன்னியர்களை குண்டர்களை வைத்து கொலை செய்தும், இப்படியாக எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை எந்தவொரு வன்னியரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பல்வேறு உன்னதமான நோக்கத்திற்காக உலகை வலம் வந்து கொண்டிருந்த போதும், நம் சமுதாயத்தின் அர்பணிப்புகளை மறந்து, மரம்வெட்டிகள் என எள்ளி நகையாடிய கூட்டத்தைக் கண்டு, வெகுண்டு, பசுமைத் தாயகம் என்றொரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஊர்உலகம் மெச்சும் வகையில் பணி செய்து, எள்ளிப் நகையாடியவர்களையே, தலையங்கங்களில் பாராட்டுப்புகழ் பாடவைத்தவன் நான் என்பது எனது வன்னியகுலத்தினர் ஒவ்வொருவரும் நன்கறிவர். இன்று இந்த கபட நாடகம் ஆடுவது எதற்காக….

நமது சமுதாய முன்னேற்றத்திற்காக, தனது சொத்துக்களை விற்று கடுமையாக உழைத்த திரு.இராமசாமி படையாட்சியாரின் தியாகங்களை பாராட்ட மனமில்லை என்றாலும்,களங்கம் கற்ப்பிக்காமல் இருந்திருக்கலாம்…..ஆனால் செய்யக் கூடாத காரியங்களை எல்லாம் செய்துவிட்டு, இன்று தான் சுயநினைவு வந்தது போல், நானும் மாலை போட்டு மரியாதை செய்கிறேன் என்று வந்து நிற்கிறீர்கள்.

இதுவரை தனிப்பட்ட ஒரு வன்னியன் சமுதாய தொண்டு செய்யவோ,கல்விப் பணி செய்யவோ நீங்கள் அனுமதித்தது உண்டா…அறிவார்ந்த சமுதாயத்தை வளர்க்க வேண்டுமே ஒழிய அடியாட் களாகவும், தன்னையும், சிறிதளவும் தகுதியே இல்லாத தனது குடும்பத்தினரின் துதிபாடிகளாகவும் உருவாக்குவது நல்லதல்ல.முதலில் உங்களை திருத்திக் கொண்டு பின் பிறரை கேள்வி கேளுங்கள்.

மாவீரன் குரு, உயிரோடு இருந்த போது சரியான சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடிய நிலை யிலிருந்தும், காப்பாற்றாமல், இறந்த பிறகு இன்று, மணிமண்டபம் கட்டி தியாகியாக்கி, அதிலும் அரசியல் செய்வது என்பது, காலம் முழுவதும் வன்னியர்களின் பெயரைச் சொல்லியே பிழைப்பும் நடத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை அடையாளம் கண்டு , நமது வன்னிய இளைய தலைமுறையினர் பகுத்தறிந்து செயல்படுவார்கள் என்பது தின்னம்.

த.சீனுவாசராவ் படையாச்சி, தலைவர்,

உலக சத்திரியர்கள் கூட்டமைப்பு, (World Kshatria Organisation)