செப். 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை: சென்னை மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை:

ரும் செப்டம்பர் 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 8ந்தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பல மின்சார ரயில் சேவைகள்  மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள தால், எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 இதனால் மின்சார ரயில் சேவைகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 11.45 மணி முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்குக் கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையிலான 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதை ஈடுகட்டும்  வகையில்  14 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. “,