செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.94,442 கோடி: நிதி அமைச்சகம் தகவல்

சென்னை:

செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரியின் வசூல் ரூ.94,442 கோடி ஆக உயர்ந்துள்ள தாக  மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து மாதா மாதம் வசூலாகும் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜி.எஸ்.டி மூலம் வந்தவருவாய்  ரூ.90 ஆயிரத்து 690 கோடி  கிடைத்தது. இது குறைவு என கூறப்பட்டது.

இந்த நிலையில்,  கடந்த செப்டெம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் அரசு ஈட்டிய வருமானம், ஆகஸ்டு மாத்தை விட 482 கோடி ரூபாய் அதிகரித்து 94 ஆயிரத்து 442 கோடி ரூபயை எட்டியுள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகக்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ”இதில் ரூ. 15,318 கோடி சி.ஜி.எஸ்.டி, ரூ. 21,061 கோடி எஸ்.ஜி.எஸ்.டி, ரூ. 50,070  கோடி ஐ.ஜி.எஸ்.டி ஆகவும் (இதில் ரூ. 25,308 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்) மற்றும் ரூ. 7,993 கோடி வரி தீர்வையாகும் (இதில் ரூ. 769 இறக்குமதியில் வசூலிக்கப்பட்டதாகும்),” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் 30, 2018 வரை 67 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர் 3பி வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி வரி வசூலுக்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிர்ணயித்திருந்த ரூபாய் 1 லட் சம் கோடி இலக்கை விட ஆறு சதவீதம் குறைவாகவே வசூலாகியுள்ளது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 3 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டு இந்த இலக்கு எட்டப்பட்டது. அதன்பிறகு இதுவரை இலக்கை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.